பேட்மிண்டன் உலக தரவரிசை: நம்பர் 1 இடத்தை பிடித்து ஸ்ரீகாந்த் கிதாம்பி சாதனை

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      விளையாட்டு
Kidambi Srikanth 2018 4 12

கோல்ட் கோஸ்ட் : பேட்மிண்டன் போட்டிக்கான உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஸ்ரீகாந்த் கிதாம்பி பெற்றுள்ளார்.

காலிறுதிக்கு...

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த கிதாம்பி. காமன்வெல்த்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பி நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் விக்டோக் அக்செல்சனை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னுனேறினார். அத்துடன் 76895 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பூர்த்தி செய்தார்.


4 பட்டங்கள்...

ஸ்ரீகாந்த் கிதாம்பி 2016-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய போட்டியில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கங்களை வென்றார். தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியிலுமு கலப்பு அணிகள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017-ம் ஆண்டு மட்டும் நான்கு சூப்பர் சீரிஸ் டைடிலை வென்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து