முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு மாற்றம்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. இதனால் முதல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் பகுதியில் மோசமான நிலை ஏற்பட்டது. இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஐ.பி.எல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் விளையாட முடியாமல்போனது வருத்தமளிக்கிறது' என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 ட்விட்டரில், தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், 'சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது. பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ்ப் பாசமும் நேசமும் கிடைக்காது. மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடமிருந்து விடைபெறுகிறேன். வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்' என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல, சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் ட்விட்டர் பதிவில், 'சென்னையிலிருந்து இன்று செல்வது வருத்தமாக உள்ளது. பிரச்சினைகள் தீர்ந்து, அமைதியான நிலை திரும்பும் என்று நம்புகிறேன். எங்கள் அணிக்கு சிறந்த வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி' என்று பதிவிட்டுள்ளார். அதேபோல, பில்லிங், ஷேன்வாட்சன், இம்ரான் தாஹிர், மைக் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சென்னையில் விளையாட முடியாமல் போனது வருத்தமளிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.



இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து