முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அளித்த தகவல்கள்: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அளித்த தகவல்களை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, பேஸ்புக்கில் இருந்து 8.5 கோடிக்கு மேற்பட்ட பயனாளிகளின் தகவல்களை திருடி ஆய்வு செய்துள்ளது. இந்தியத் தேர்தலிலும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அளித்த தகவல்களை காங்கிரஸ் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 நாட்களுக்கு முன்னர் நடந்த விசாரணையின் போது பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க், தேர்தலில் தலையீடு, பொய் செய்திகள் வெளியீடு விஷயத்தில் தவறுகள் நேர்ந்து விட்டன. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் இந்திய தேர்தல்களில் தலையீடு எதுவும் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாஅளித்த தகவல்களை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் பயன்படுத்தியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இனி வரும் காலங்களில் வாக்காளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் உறுதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து