முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் அருசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

கம்பம்,- கம்பம் அரசு மருத்தவமனையில்  மத்திய அரசின் தூய்மை பாரதிய திட்டத்தின்கீழ், தூய்மை சேவை இயக்கம் என்ற பெயரில் ஏப்ரல் 1ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை விழா நடைபெற்று வருகின்றன.கடந்த 1ம் தேதி நடந்த துவக்கவிழாவில்
டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையை சுகாதாரமாகவும் தரமான சேவைகள் வழங்குவது குறித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை சார்பில், மருத்துவமனை, கல்லூரி, பள்ளி மற்றும் கிராம பகுதிகளில் தூய்மைப்பணி சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் தரமான சேவை என்ற தலைப்பில் கர்பிணி பெண்களுக்கான யோகா மற்றும் பிராணயாமப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் பொன்னரசன் தலைமை வகித்தார்.தலைமை மருத்துவர் அமுதினி முன்னிலை வகித்தார் .இதில் கர்ப்பிணிகள் சுகபிரசவம் பெறுவதற்கான தடாசனம்,அர்த்த சக்ராசனம்,ஏகபாத ஆசனம்,உட்கடாசனம்,பத்மாசனம்,பத்ராசனம்,உஷ்ராசனம் போன்ற யோகா பயிச்சிகளை காமயகவுண்டன்பட்டி
ஆரம்பசுகாதார நிலைய சித்தமருத்துவர் சிராஜ்தீன் வழங்கினார்.இந்த பயிற்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட கர்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தும் வந்திருந்த கர்ப்பிணி பெண்களை தாய்மை உள்ளத்தோடு தலைமை செவிலியர் ஜோசப் ஜென்னி கனிவுடன் உபசரித்தார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து