முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதன் முதலாக ஏழை பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை:

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதன் முதலாக தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏழை பெண்ணுக்கு அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். திருமங்கலம் தாலுகா மேலஉரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரது மனைவி கனகவள்ளி(55).இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான மூட்டு வலியினால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதையடுத்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த கனகவள்ளியை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவருடைய மூட்டில் தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது தெரியவந்தது.இதையடுத்து திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.பூமிநாதன் ஆலோசனையின்படி கனகவள்ளிக்கு தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிநவீனமான முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து திருமங்கலம் அரசு மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர்.சிவக்குமார் தலைமையில் மயக்கவியல் நிபுணர் டாக்டர்.சாலமன்ராஜ் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் கனகவள்ளியின் இடது முழங்காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையின் போது ஜெர்மன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை மூட்டினை கனகவள்ளிக்கு பொருத்தி திருமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் புதிய சாதனை படைத்தனர்.தனியார் மருத்துவமனைகளில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சையினை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதன் முதலாக தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் எந்தவித கட்டணமுமின்றி ஏழைப் பெண்ணான கனகவள்ளிக்கு செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து 500வது வார்டில் அனுமதிக்கபட்டுள்ள கனகவள்ளி ஓரிரு நாட்களில் நடக்கமுடியும் என்றும் ஒருவாரத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர்.சிவக்குமார் தெரிவித்தார்.இந்நிலையில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதன்முதலாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்கள் குழுவிற்கு தலைமை மருத்துவர் டாக்டர்.பூமிநாதன் வாழ்த்து தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து