காமன்வெல்த் போட்டி: மல்யுத்தம் - துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 3 தங்கம்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      விளையாட்டு
Commonwealth Games 2018 04 03

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் மல்யுத்தப் போட்டி 65 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல், துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கமும், மகளிருக்கான 50 மீ ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவாந்த் தங்கப் பதக்கம் வென்றார்.

65 கிலோ எடை...
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்றும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது. நேற்று மல்யுத்தப் போட்டி 65 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார்.

50 மீ ரைபிள் பிரிவில்...
மகளிருக்கான 50 மீ ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவாந்த் தங்கப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்று அசத்தினார். இது இந்தியாவுக்கு கிடைத்த 16-வது தங்கம் ஆகும்.


50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலின் மற்றொரு பிரிவில், இந்தியாவின் அஞ்சூம் மவுட்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

3-வது இடத்தில்...
17 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என 41 பதக்கங்களுடன், தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து