மல்யுத்தம்: மவுசம் கட்ரி வெள்ளிப்பதக்கம்

வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2018      விளையாட்டு
Bajrang Punia wins Gold 2018 04 13

மல்யுத்தப் போட்டியிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப்போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா தண்டா வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவின் மல்யுத்த போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான திவ்யா காக்ரன் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில், ஆடவருக்கான 97 கிலோ எடைப்பிரிவின் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் மவுசம் கட்ரி வெள்ளிப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கத்தை தென்ஆப்ரிக்க வீரர் மார்டின் எராஸ்மஸ் தட்டிச் சென்றார். 64 தங்கம் வென்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 29 தங்கப் பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

Racing Pigeon | Prepare to grow | புறாக்களை குஞ்சுகளிலிருந்து பந்தயத்திற்கு தயார் படுத்துதல்

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து