பசிபிக் நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் மீண்டும் இணைவது குறித்து டிரம்ப் பரிசீலனை

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      உலகம்
trump 2017 10 12

வாஷிங்டன்: ஆஸ்ரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 பசிபிக் நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லிண்ட்ஸ் வால்ட்டர்ஸ் தெரிவித்ததாவது:
அதிபர் தேர்தலின்போது அதிபர் டிரம்ப் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முந்தைய ஒபாமா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பசிபிக் நாடுகள் வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. அதைவிட சிறந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.

தற்போது அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா, இல்லையா என்பது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

பசிபிக் நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று டிரம்ப் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து