128-வது பிறந்த நாளை முன்னிட்டு சட்ட மாமேதை அம்பேத்கர் உருவப்படத்திற்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மலர் தூவி மரியாதை

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      தமிழகம்
EPS-OPS

சென்னை: சட்டமேதை அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ. தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மாலை அணிவித்து...
அம்பேத்கரின் 128-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே உள்ள அம்பேத்கர் சிலைக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிர்வாகிகள்...
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அவைத் தலைவர்  மதுசூதனன், துணை ஒருங்கிணை ப்பாளர் கே.பி.முனுசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் பண்ருட்டி ராமசந்திரன், எஸ். கோகுல இந்திரா, பொன்னையன், ஜே.சி.டி. பிரபாகர், ஆதி ராஜாராம், மீனவர் அணி செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், பெஞ்சமின் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தி.நகர் பி.சத்தியா, நா. பாலகங்கா, விருகை வி.என்.ரவி, டி.ஜி. வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் டி.சிவராஜ், பி.சின்னையன், புஷ்பா நகர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் நுங்கை மாறன், டி.ஜெயச்சந்திரன், உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து