முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி 10-வது நாள்: 25 தங்கம் உள்பட மொத்தம் 59 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கோல்டு கோஸ்ட்: 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு போட்டியில் நேற்று 10-வது நாளில் இந்திய அணியினரின் பதக்க அறுவடை தொடர்ந்தது. இந்திய அணி பல்வேறு போட்டிகளில் நேற்று மட்டும் 8 தங்கத்தை குவித்தது. இதன் மூலம் மொத்தம் 59 பதக்கங்களுடன் இந்திய அணி 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

* காமன்வெல்த் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.

* காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

* காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.

* காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார்.

* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார்.

* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 46-49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்றார்.

* ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ஸ்மித் தங்கம் வென்றுள்ளார்.

* மகளிர் 50 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினிஷ் போகத் தங்கம் வென்றார்.

* கலப்பு ஸ்குவாஷ்  இறுதி போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்/ சவுரவ் கோஷல் தோல்வி அடைந்தது. இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் பெற்றது.

* மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

* மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சிங்கப்பூரின் மெங்கயு யூ என்ற வீராங்கனையை இந்தியாவின் மனிகா பத்ரா வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.

இந்தப்போட்டி நேற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து