முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.எச்.பி அமைப்பில் இருந்து பிரவீண் தொகாடியா விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

குருகிராம்: கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் இருந்து பணியாற்றி வந்த பிரவீண் தொகாடியா அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வி.எச்.பி அமைப்பின் சர்வதேச தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரவீண் தொகாடியா தனது தீவிர ஆதரவாளரான ராகவ் ரெட்டியை நிறுத்தினார். இவருக்குப் போட்டியாக இமாச்சலப்பிரதேச முன்னாள் கவர்னரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.எஸ்.கோக்ஜே போட்டியிட்டார்.  இந்த தேர்தலில் கே.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றார். 61 வாக்குகள் மட்டுமே ராகவ் ரெட்டி தோல்வி அடைந்தார். இதையடுத்து, தானும், தனது ஆதரவாளர் ரெட்டியும் வி.எச்.பி அமைப்பில் இருந்து விலகுவதாக பிரவீண் தொகாடியா அதிரடியாக அறிவித்தார். வி.எச்.பி அமைப்பின் செயல் தலைவராக அலோக் குமாரும், துணைத் தலைவராக சம்பத் ராயும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே ஆளும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன் பிரவீண் தொகாடியா மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கும், வி.எச்.பி அமைப்புக்கும் இடையே விரிசல் இருந்து வந்தது. சமீபத்தில், தன்னை எண்கவுண்ட்டர் செய்ய சதி நடப்பதாக குற்றச்சாட்டு கூறி தொகாடியா பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பிரவீண் தொகாடியாவும், அவரின் ஆதரவாளர் ரெட்டியும் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியதாவது:
வி.எச்.பி சர்வதேச தலைவர் பதவிக்கான தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக சட்டம் இயற்ற வேண்டும், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு சட்டத்தை நீக்க வேண்டும், பசுக் கொலையை தடுக்க வேண்டும், வங்கதேசத்தில் இருந்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை திருப்பி அனுப்பவேண்டும், விவசாயிகளின் கடனைத் தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ம் தேதி ஆமதாபாத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவேன். இவ்வாறு பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து