முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி ஆட்சியில் ஒதுக்கப்பட்டவர்களாகவே தலித்துகள் உள்ளனர்: மாயாவதி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: அம்பேத்கர் பெயரில் பிரதமர் மோடி திட்டங்கள் கொண்டு வருவதில் பயனில்லை என்றும், அவரது ஆட்சியில் தலித்துகள் ஒதுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

சட்ட மேதை அம்பேத்கரின் 127-வது பிறந்த தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறியதாவது,
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, பெரும் தொழிலதிபர்களுக்காக பணியாற்றுவதுடன், தலித்துகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை புறக்கணிக்கிறது. பா.ஜ.க அரசு அம்பேத்கரின் பெயரில் திட்டங்கள் கொண்டு வந்து அரசியல் செய்கிறது. ஆனால் உண்மையில், அதன் ஆட்சியின்போதுதான் நாட்டில் இதுவரை இல்லாத அளவில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்கின்றன.

ஆனால் பா.ஜ.கவோ, தலித்துகளிடம் நாடகமாடி வருகிறது. மத்திய அரசு உண்மையாகவே தலித்துகளின் நலனுக்காக பணியாற்றத் தொடங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிராக மத்திய அரசு முறையாக செயலாற்றவில்லை.

தலித்துகள் குறித்த பிரதமர் மோடியின் மனநிலையை இனியும் மறைக்க இயலாது. மத்திய அரசு உண்மையாகவே எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து கவலைப்படுமானால், உடனடியாக அமைச்சரவையை கூட்டி அவசரச் சட்டம் கொண்டு வந்து அதை பலப்படுத்தலாமே? அதைவிடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனு விசாரணைக்கு வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? பா.ஜ.க அரசு தொழிலதிபர்களுக்கு உகந்ததே தவிர, ஏழைகளுக்கானது அல்ல என்று மாயாவதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து