எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடிக்கிறார் பிரியா பவானிசங்கர்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      சினிமா
priya bhavani shanka- sj suryajpg

Source: provided

எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் பிரியா பவானிசங்கர். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானிசங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.

பின்னர், ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் ஜோடியாக ‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், கார்த்தியின் மாமா பெண்ணாக நடிக்கிறார் பிரியா பவானிசங்கர்.

தொடர்ந்து, அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில், ‘மேயாத மான்’ படத்தில் நடித்த இந்துஜாவும் நடிக்கிறார்.‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன், தன்னுடைய அடுத்த பட வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் பிரியா பவானிசங்கர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து