காமன்வெல்த் பேட்மிண்டன்: சாய்னா தங்கம் வென்று சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2018      விளையாட்டு
Saina Nehwal 2017 1 18

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 4-ம் தேதி தொடங்கின. முதல் நாளில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து 10 நாட்களாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டிகளின் போது இந்திய வீரர், வீராங்கனைகள் 8 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினர். மேலும் 5 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், மகளிருக்கான பேட்மிண்டன் இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து மோதினர்.

இதில் 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி நேவால் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தோல்வியடைந்த பி.வி. சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து