’ஒத்தையில’ போராடிய டோனி!

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      விளையாட்டு
doni 2018 04 16

Source: provided

மொகாலியில் நடந்த ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி தனியாக போராடினார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. ஒருகட்டத்தில் 240 ரன்கள் வரை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவர்களில் பஞ்சாப் வீரர்களின் ரன்வேகத்தை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் குறைத்தார்கள்.

சிஎஸ்கே தரப்பில் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டையும் ஹர்பஜன் சிங், வாட்சன், பிராவோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கேவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது பஞ்சாப். கேப்டன் டோனி, பொறுமையாக ஆடினார். அதே நேரம் நல்ல பந்துகளை விளாசவும் செய்தார். இந்த நேரத்தில் ராயுடு ரன் அவுட் ஆக, சிஎஸ்கேவின் வெற்றி கேள்விக்குறியானது. அடுத்து வந்த ஜடேஜா, ரன் எடுக்கத் தடுமாற, தேவை யான ரன் ரேட்டும் ரசிகர்களின் டென்ஷனும் ஏறிக்கொண்டே இருந்தது. இருந்தாலும் ஒத்தையில போராடினார் டோனி.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை மொகித் ஷர்மா வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட பிராவோ ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்து வைடானது. அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். இப்போது இரண்டு அணியிலும் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. ஆனால், முகத்தில் எந்த சலனத்தையும் காண்பிக்காத டோனி, அடுத்தடுத்து சிக்சர் அடிப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர் ரசிகர்கள். ஆனால், மொகித் சர்மா, பந்தை வைட் யார்க்கராக வீசி கடுப்பேற்றினார் டோனியை.அடுத்தப்பந்தை டோனியால் அடிக்க முடியாமல் போனது. இதற்கடுத்தப் பந்து பவுண்டரிக்குப் போகும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட நிலையில் எல்லைக் கோட்டை டச் பண்ணவில்லை. இதில் ஓடி ரன் சேர்க்கவில்லை டோனி.

இதனால், பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. ஆறுதலாக, கடைசி பந்தை சிக்சருக்குத் தூக்கினார் டோனி.  வெறும் 4 ரன்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. டோனி அவுட் ஆகாமல் 44 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார். ஐபிஎல் போட்டியில் டோனியின் அதிகப்பட்ச ரன் இது. மூன்றாவது லீக்கில் ஆடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வி.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து