ஆப்கனில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் 6 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      உலகம்
gun nattack afghanistan 2018 4 17

காபூல் : ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஏபி செய்தி நிறுவனம் சார்பில், "ஆப்கானிஸ்தானில் கொர் மாகாணத்தில் நேற்று  துப்பாக்கி ஏந்திய நபர் தாக்குதல் நடத்தினார். இதில் பொதுமக்கள் ஆறு பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொர் மாகாண காவல்துறை செய்தித் தொடர்பாளர் இக்பால் நிசமி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஷியா மக்களை குறித்து வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சமீப காலமாக தீவிரவாதத் தாக்குதலை அதிகரித்துள்ளது. இதனால் இந்தத் தாக்குதலையும் தலிபான்கள்தான் நடத்தியிருப்பார்கள் என்று ஆப்கானிஸ்தான் போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து