முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணத்தட்டுப்பாட்டை குறைக்க அதிகமாக ரூ. 500 நோட்டுகள் அச்சிடப்படும் - மத்திய அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  இந்தியா முழுக்க திடீரென்று நிலவும் பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார்.

நேற்று காலையில் இருந்து இந்தியாவில் திடீர் என்று ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐதராபாத்தில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு தற்போது இந்தியா முழுக்க பரவி உள்ளது. தமிழகத்திலும் பல பகுதிகளில் இந்த தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்படுமா என்ற பதற்றம் உருவாகி உள்ளது. பீகார், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி பணத்தட்டுப்பாட்டை குறைக்க 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக அச்சிடப்பட உள்ளது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். 5 மடங்கு அதிகமாக 500 நோட்டுகள் ரூபாய் அச்சிடப்பட உள்ளது. இப்போதுவரை தினமும் 500 கோடி மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது.

ஆனால் இன்னும் இரண்டு நாட்களுக்கு தினமும் 2500 கோடி ரூபாய் மதிப்பிற்கு 500 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட உள்ளது. இந்த மாதத்தில் மொத்தமாக அச்சிடப்படும் 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு 70000-75000 கோடியாக இருக்கும் என்று சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். இதனால் பணத்தட்டுப்பாடு குறையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து