முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான், ம.பி. டெல்லி உட்பட பல மாநில ஏ.டி.எம்.களில் பணம் இல்லை: அச்சத்தில் மக்கள்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், டெல்லி உள்பட பல மாநிலங்களில் ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன. பணமதிப்பு நீக்க காலம் மீண்டும் வந்து விட்டதா என மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின் புதிய ரூ. 2000, ரூ. 200, ரூ. 500 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பின் நிலைமை ஓரளவு சீரடைந்தது.

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார், தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பணப்புழக்கம் குறைந்து வந்துள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பல நகரங்களில் இருக்கும் ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் காலியாகக் கிடந்தன. இதனால், பணமதிப்பிழப்பு காலம் மீண்டும் திரும்பி விட்டதாக மக்கள் கருதினர்.

இதற்கிடையே மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு அச்சடித்து வெளியிட்ட ரூ. 2000 நோட்டு திடீரென மறைந்து விட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.15 லட்சம் கோடிதான் இருந்தது. அதன்பின் மத்தியஅரசு ரூ.16.50 லட்சம் கோடி அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளது. இதன் பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது என்று எச்சரித்து இருந்தார்.

மேலும் பணம் இல்லாமல் ஏ.டி.எம்.கள் நாட்கணக்கில் காலியாக இருந்து வருவது தொடர்வதால், மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சம் நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து