முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி - சுவீடன் பிரதமர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஸ்டாக்ஹோம் : பிரதமர் நரேந்திர மோடி ஸ்டாக்ஹோமில் சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோவனை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சுவீடன் நாட்டிற்கு சென்றார். பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபன் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். சுவீடன் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

பிரதமர் மோடி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் இந்தோ-நார்டியாக் (ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு) முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். மேலும் சுவீடனைச் சேர்ந்த ஸ்டீபன் லோப்வெனுடனும், நான்கு நோர்டிக் நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து