முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலை கிராமங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மிகவும் தரமானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -மலை கிராமங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் மிகவும் தரமானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதிபட தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜெயஸ்ரீ என்ற பெண் பரிதாhமாக உயிரிழந்தார். 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் சி.சீனிவாசன் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் மாலதி பிரகாஷ் -இடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
மலைச்சாலையில் பேருந்து கவிழ்நது விபத்துக்குள்ளான பெண்ணின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரண உதவி வழங்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரி;க்கை வைத்துள்ளேன். அவர் கண்டிப்பாக அனுமதி தருவார் என்று நம்புகிறேன். விரைவில் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும். இதுபோன்ற விபத்துக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மலை பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகள் தரமானதாக மாற்றப்படும். மேலும் மலைகிராமத்திற்கு புதிய அரசு பேருந்து விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவவர் வேலு, அபிராமி கூட்டுறவு சங்கத் தலைவர் பாரதிமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து