முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர வங்கியில் ரூ.2,654 கோடி கடன் மோசடி: குஜராத்தை சேர்ந்த 3 தொழிலதிபர்கள் கைது

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

காந்திநகர், ஆந்திர வங்கியில் 2654 கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாத முறைகேடு வழக்கில் குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

குஜராத்தை சேர்ந்த டையமண்ட் பவர் இன்பிராஸ்டிரெக்ஸர் என்ற நிறுவனம் ஆந்திரா வங்கியில் 2,654 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை மற்றும் வட்டியை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இதையடுத்து 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சி.பி.ஐ இந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்தது. இதில் நிறைய சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து இந்த முறைகேடு தொடர்பாக  அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இவர்கள் வாங்கிய கடனில் இதுவரை ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தப்படவில்லை. இதனால் அந்த நிறுவனத்தின் முக்கியமான அதிகாரிகளை அமலாக்கத்துறை போலீஸ் தேடி வந்தது. இந்த நிலையில் தற்போது வதோதராவை சேர்ந்த சுரேஷ் நரைன் பட்நாகர், அமித் பட்நாகர், சுமித் பட்நாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களை போலீஸ் விசாரணை செய்து வருகிறது. இவர்கள்தான் அந்த நிறுவனத்தின் முக்கியமான அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து