முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : ஐரோப்பிய நாடுகளுக்கு 5 பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஸ்வீடன் பயணத்தை முடித்து, இந்திய நேரப்படி நேற்று அதிகாலை லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மன் நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 16-ம் தேதி புறப்பட்டார். ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுடன் தொழில், வர்த்தகம், இருதரப்பு உறவுகள் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினார்கள். ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த இந்தியா-நார்டிக் மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஸ்வீடனில் தனது நிகழ்ச்சிகளை முடித்த பிரதமர் மோடி, அங்கிருந்து இங்கிலாந்து புறப்பட்டார். இந்திய நேரப்படி நேற்று அதிகாலை ஹீத்ரு நகரத்துக்குப் பிரதமர் மோடி சென்று சேர்ந்தார். இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

அதன்பின் அமைச்சர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வளர்ந்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய பொருளாதார ஆதாயங்களை, முன்னேற்றங்களைக் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து