முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. துணை அமைப்புகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜெனிவா : ஐக்கிய நாடுகள் சபையின் அரசுசாரா நிறுவனங்கள் குழு உட்பட பல்வேறு துணை அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலானது, நீடித்த வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டின் மீது கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சில், தனது பல்வேறு துணை அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் கூறும்போது, “இந்தியாவுக்கு உலக நாடுகள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது” என்றார்.

குறிப்பாக, அரசுசாரா நிறுவனங்கள் குழுவுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா முதலிடம் பிடித்தது. ரகசிய வாக்கெடுப்பில், ஆசிய பசிபிக் பிரிவில் இந்தியா (46 வாக்குகள்) பாகிஸ்தான் (43), பஹ்ரைன் (40), சீனாவும் (39) லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் பிரிவில் பிரேசில், கியூபா, மெக்சிகோ மற்றும் நிகரகுவாவும் வெற்றி பெற்றன. 8 உறுப்பு நாடுகளைக் கொண்ட இக்குழுவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ல் தொடங்கி 4 ஆண்டுகள் நீடிக்கும்.

பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் நிலைக்குழுதான் அரசுசாரா நிறுவனங்கள் குழு. தொண்டு நிறுவனங்களை (என்ஜிஓ) வகைப்படுத்துவது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் அவற்றின் 4 ஆண்டு கால அறிக்கைகளைப் பரிசீலிப்பதுதான் இதன் பணி,.

இதுதவிர, பல்வேறு உறுப்பு நாடுகளைக் கொண்ட மக்கள் தொகை மற்றும் வளர்ச்சிக் குழு, சமூக வளர்ச்சிக் குழு, குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக் குழு, ஐ.நா. வளர்ச்சி திட்ட செயல் வாரியம், ஐ.நா. மக்கள் தொகை நிதியம், ஐ.நா. திட்ட சேவைகள் அலுவலகம் ஆகிய துணை அமைப்புகளுக்கான தேர்தலிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து