முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: அதிபர் அறிவிப்பு

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

யங்கூன் : மியான்மர் அதிபர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆங் சான் சூகி-யின் நெருங்கிய உதவியாளராக இருந்து, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற டின் க்யாவ் (71), உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் மியான்மரின் புதிய அதிபராக, அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தீவிர ஆதரவாளர் வின் மியிந்த் (66) பொறுப்பேற்றர். அவர் பொறுப்பேற்று ஒரு மாதத்துக்குள்ளாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மியான்மரில் 'தின்கியான்' என்று அழைக்கப்படும் பௌத்த புத்தாண்டு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மனிதாபிமான அடிப்படையில் 8,500 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மியான்மர் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளில் 36 பேர் அரசியல் வழக்குகளில் சிக்கி சிறையில் இருப்பவர்கள். போதை மருந்து கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டோருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டினர் 50 பேரும் தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர்.

மியான்மரில் 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்றது . நீண்ட போரட்டத்துக்குப் பிறகு, கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றது. அவரது கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ராணுவ ஆட்சியின்போது சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் ஏராளமானோரை அவ்வப்போது விடுதலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து