முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் ஸ்ரீஅபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் ஸ்ரீஅபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் நகரின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமான ஸ்ரீஅபிராமி அம்மன் உடனமர் ஸ்ரீபத்மகிரீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆலயத்தில் ஸ்ரீஅபிராமி, ஸ்ரீபத்மகிரீஸ்வரர், ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் என 2 சிவபெருமான் மற்றும் 2 அம்மன் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். மேலும் பரிவார தெய்வங்களாக விநாயகர், வள்ளி_ தெய்வானை சமேத முருகன், ஸ்ரீதுர்க்கை, மகாலெட்சுமி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், பைரவர், நவக்கிரஹங்கள் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
சித்திரை திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு ரிஷப லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. சிவபெருமானின் வாகனமான நந்தி, சங்கு, ஸ்வஸ்திக் , வேல் உருவம் பொறித்த கொடி சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ஓம் நவசிவாய என சிவமந்திரத்தை பலமுறை கூறி வழிபட்டனர். மேலும் ஸ்ரீஅபிராமி அம்மன், ஸ்ரீபத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் இரவு  கேடய வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
மேலும் தினந்தோறும் அம்மன் மற்றும் சிவபெருமான் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனர். வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாப்பிள்ளை அழைப்பும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. மறுநாள் 28ம் தேதி சனிக்கிழமை சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. 29ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து