முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களுடன் அரசு பஸ்சில் பயணித்த விருதுநகர் கலெக்டர்

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்,- மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொள்ள அரசு பேருந்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் விருதுநகர் கலெக்டர் சிவஞானம் பயணம் மேற்கொண்டது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியது.
 விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம்  நூர்சாகிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 154 பயனாளிகளுக்கு ரூ.1,99,000 மதிப்பலான  நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 
இம்முகாமில் கலெக்டர் தெரிவித்ததாவது :-
   மக்களை நோக்கி அரசு உதவிகள் என்பதன் அடிப்படையில் இது போன்ற மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் ஒவ்வொருவரும் இத்திட்டம் குறித்து தெரிந்து கொண்டு, தகுதியானவர்களாக இருக்கும்பட்சத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். தங்களை பற்றியும் தங்களுக்குரிய தேவைகள் குறித்தும் தெளிவாகவும் உண்மையாகவும் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு தேவைப்படுவதை நிர்வாகத்தால் செய்து தரமுடியும். எனவே தேவைகள் என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அரசு வழங்கும் சலுகைளை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக, மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் படி, அனைத்து அலுவலர்களும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்து கலெக்டர் அலுவலகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பேருந்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலெக்டரும் பயணம் செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டார்.
இம்முகாமில், ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ மு.சந்திரபிரபா, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்(சிவகாசி) தினகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், இணை இயக்குநர் (கால்நடைபராமரிப்புதுறை) ஜெகதீசன், உதவி ஆணையர்(கலால்) சங்கரநாராயணன், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் இராமநாதன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து