முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகரித்து வரும் கல்லீரல் நோய்கள் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் எச்சரிக்கை

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

மதுரை, ஏப்.- உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகின்ற நிலையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, தமிழ்நாட்டில் மிகப் பொதுவான மற்றும் சிக்கலான நோயான கல்லீரல் நோய் மற்றும் அதன் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி அன்று “உலக கல்லீரல் தினம்” அனுசரிக்கப்படுவதை ஓட்டியும் மற்றும் தமிழ்நாடெங்கிலும் ஹெப்படிட்டிஸ் பி மற்றும் சி வைரஸ், வீக்கமடைந்த கல்லீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகிய நோய்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த விழிப்புணர்வு செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் மற்றும் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறை தலைவருமான டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி, குடல், இரைப்பை சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். அழகம்மை மற்றும் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை முதுநிலை சிறப்பு மருத்துவர் டாக்டர். என். மோகன் ஆகியோர், கல்லீரல் பராமரிப்பு மற்றும் கல்லீரல் நோய்களுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அவை வராமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு சிறப்புரையை வழங்கினார்கள். கல்லீரல் நோய்களின் விளைவுகள் மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல் மற்றும் அவைகளுக்கான சிகிச்சை குறித்தத் தெளிவான விளக்கத்தை இந்த நிகழ்ச்சி வழங்கியது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் மற்றும் குடல், இரைப்பை அறுவைசிகிச்சை துறை தலைவருமான டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி, இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “நமது உடலை நச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களிலிருந்து பாதுகாத்து சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க உதவுகின்ற கல்லீரல், ஒன்றுக்கும் மேற்பட்ட பல முக்கியமான செயல்பாடுகளைச் செய்கின்ற ஒரு இன்றியமையா உறுப்பாகும். ஆகவே, நமது கல்லீரலை பாதுகாப்பாக பேணுவதன் மூலம் உடல்நலத்தை பராமரிப்பது அவசியமாகிறது. எந்தவொரு வயதிலுள்ள நபர்களையும் கல்லீரல் நோய் பாதிக்கலாம். ஆனால், வீக்கமடைந்த கல்லீரல் என்பது வயது முதிர்ந்த பிரிவினர் மத்தியில் அதிகமாக இருக்கிறது. மது அருந்துவதனால் ஏற்படும் கல்லீரல் நோய் இளவயது மற்றும் நடுத்தர வயதினரிடம் மிக அதிகமாக காணப்படுகிறது. கல்லீரல் நோய்கள் குறித்து தகவல்கள் மற்றும் அதை ஒழிப்பதற்கான வழிமுறைகள் பற்றி மக்கள் மத்தியில் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் மத்தியில் விழிப்புணர்வை நாங்கள் தவறாது வழங்கிவருகிறோம். கல்லீரல் நோய்களை சரியாக கண்டறிதலிலும் மற்றும் சிகிச்சை முறைகளிலும் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், பல நோயாளிகளை குணப்படுத்த உதவியிருக்கிறது,” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து