முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட் 14 லீக் போட்டி: பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்ற மும்பை

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்தது.

பெங்களூரு பந்துவீச்சு...

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. மும்பை அணியின் துவக்க வீரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவை வெளியேற்றினார். அடுத்த பந்தில் இஷான் கிஷான் விக்கெட்டையும் எடுத்து மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார்.

பாண்டியா ரன்அவுட்...

அடுத்து வந்த கேப்டன் ரோகித் ஷர்மா, லெவிசுடன் கைகோர்த்தார். முதல் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்த போதிலும் லெவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 42 பந்துகளில் 65 ரன்கள் (பவுண்டரி 6, சிக்ஸ் 5) விளாசினார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய குருனல் பாண்டியா 15 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஐ.பி.எல். போட்டி தொடங்கியதில் இருந்து பார்ம் இன்றி தவித்துவந்த கேப்டன் ரோகித் சர்மா போட்டியில் சிறப்பாக ஆடினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 52 பந்தில் 94 ரன்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். பெங்களூர் அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

கோலி 92 ரன்கள்

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், கிவிண்டன் டீ காக்கும் களமிறங்கினர். இருவரும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். டி காக் 12 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விராட் கோலி மட்டும் நிலைத்துநின்று விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 92 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி பந்துவீச்சில் குருனல் பாண்டியா 3 விக்கெட்களும், பும்ரா, மெக்லினகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து