முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது - தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேட்டி

புதன்கிழமை, 18 ஏப்ரல் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : சென்னை, அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை அலுவலகத்தில், தமிழ திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பத்திரிக்கையளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பலருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வேலை நிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக மெர்குரி படம்
நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வேலைநிறுத்தம்

தமிழக அரசுக்கும் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் வேலுமணி நன்றி,வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி, பெஃப்சி தொழிலாளர்களுக்கு நன்றி. அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். டிஜிட்டல் பிரச்சனைக்காக கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தம் சிறிய தயாரிப்பாளர்களுக்கு பயனளிக்கும், அனைத்து வகையிலும் தமிழ் சினிமாவை முறைப்படுத்தவே இந்த வேலைநிறுத்தம்.

முறைப்படுத்துதல்...

ஜூன் 1-ம் தேதியிலிருந்து தமிழ் சினிமாவில் கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். மக்கள் மீது டிக்கெட் கட்டண சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.150க்கு மேல் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு நன்றி. 2019ம் ஆண்டு மார்ச் வரை என்னென்ன படங்களை வெளியிடுவது குறித்து முடிவுசெய்யப்பட்டுள்ளது. படங்களை வெளியிடுவதற்காக முறைப்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மெர்குரி படம்...

வேலை நிறுத்தத்திற்கு பிறகு முதலாவதாக மெர்குரி படம் நாளை வெளியிடப்படும். தனுஷ், ரஜினி , கார்த்தி சுப்புராஜ் அவர்களது ஒத்துழைப்பிற்காக அனைவருக்கும் நன்றி.  "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடு ஒத்திவைக்கப்படுமா? என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளதை கேட்டபோது, உதயநிதி கருத்துக்கு தமிழக அரசிடம் தான் பதில் கேட்க வேண்டும் என்று விஷால் தெரிவித்தார்.

முறைப்படுத்துதல் குழு

மேலும், அனைத்து திரைப்பட அமைப்பை சேர்ந்தவர்களும் திரைப்பட வெளியீடு முறைப்படுத்துதல் குழுவில் இருப்பார்கள். நடிகர்களின் சம்பளம் தொடர்பாக சனிக்கிழமை நடிகர் சங்கம் கூட்டம் நடைபெறவுள்ளது. விஸ்வரூபம் 2 , காலா ஆகிய படங்களை வெளியிடுவது குறித்து முறைப்படுத்துதல் குழு முடிவு செய்யும். டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேற்கொண்டு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் இந்த வேலைநிறுத்தம்  லை நிறுத்தத்தின் போது ஏற்பட்ட நஷ்டம் பற்றி கேள்வி எழுப்பிய போது,பெஃப்சி சங்க தலைவர்

செல்வமணி பேசியதாவது,

வேலைநிறுத்தத்தால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. எங்களால் லாபம் அடைந்தவர்களுக்கு தான் நஷ்டம் இந்த கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், நிர்வாகிகள் கதிரேசன் ss துரைராஜ் மற்றும் பெஃப்சி சங்க தலைவர் செல்வமணி கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து