முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாண்டு கால கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது: நிர்மலாதேவி

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: பத்தாண்டு கால கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது என விசாரணையின் போது பேராசிரியர் நிர்மலாதேவி போலீசாரிடம் தெரிவித்தார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.  அவர் மீது 3 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ. டி.எஸ்.பி. ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரியாக மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நேற்று அதிரடி விசாரணை தொடங்கினார்கள்.

பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஏற்கனவே விசாரித்த அருப்புக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மயில், மாவட்ட குற்றப்பதிவேடு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரியை சந்தித்து வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர்.

2 மணி நேரம் விசாரணை
அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்களை  அவர் வெளியிட்டதாக தெரியவந்துள்ளது. சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தில், “பத்தாண்டு கால கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது” என்று கூறினார். இதை கேட்டு போலீஸ் விசாரணை அதிகாரிகள் மிரண்டு போனார்கள். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நிர்மலாதேவியின் பெற்றோரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர் அருப்புக்கோட்டையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தற்போது பணியாற்றும் கல்லூரியிலேயே இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை பெற்றுள்ளார்.

2008-ம் ஆண்டில் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வந்த போது தொலை நிலைக்கல்வி இயக்கத்தில் 2 பேராசிரியர்களுடன் அலுவல் ரீதியில் தொடர்பு ஏற்பட்டது.

கடந்த மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்களுக்கான புத்தகப் பயிற்சிக்காக அவர் சென்றிருந்தார். அப்போது தொலைதூரக்கல்வி இயக்கத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில் அருப்புக்கோட்டை கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தவறாக வழிகாட்டி வற்புறுத்தியதாக தெரிகிறது.

மேலும் உயர்கல்வித் துறையில் பல அதிகாரிகளுடனும் பேராசிரியை நிர்மலா தேவிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக தெரிகிறது. தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளதால் முதல் கட்ட விசாரணை மட்டும் முடிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் பல்கலை போராசிரியர்கள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலைக்கல்வி இயக்கத்தில் பணியாற்றி வரும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களும் விசாரணை வளையத்துக்குள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் இதற்கு முன் நிர்வாக பொறுப்பில் இருந்த சிலரும் இந்த வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அந்த உயர் போலீஸ் அதிகாரி  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து