முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு மக்களிடையே சகோதரத்துவம் எழுச்சிபெற்றுள்ளது: முதல்வர் மெகபூபா

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஜம்மு: ஜம்மு மாநில மக்களிடையே சகோதரத்துவம் எழுச்சிபெற்றுள்ளதாக அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி பாராட்டியுள்ளார்.

2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றிருக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கத்ரா பகுதியிலுள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி பல்கலைகழகத்தில் நடந்த 6-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி கண்டனம்
கத்துவா சிறுமி பலாத்காரம் குறித்து பேசிய ஜனாதிபதி, " கத்துவா சிறுமி பலாத்காரம் போன்ற சம்பவம் நடப்பது நாட்டுக்கே அவமானம் மற்றும் வெட்கக்கேடான ஒரு விஷயம். எந்த மாதிரியான சமூகத்தை நாம் உருவாக்கி கொண்டு இருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். எந்த ஒரு சிறுமிக்கோ அல்லது பெண்களுக்கோ இது போன்ற சம்பவம் ஏற்படாமல் உறுதி செய்வது நமது பொறுப்பாகும்” எனக் கூறினார்.

மக்கள் எழுச்சிக்கு முதல்வர் பாராட்டு
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, கத்துவா சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் நாட்டு மக்கள் குறித்து கூறுகையில்,  ”கடந்த 30 வருடங்களான ஜம்மு மக்கள் சகிப்பு தன்மையுள்ள விஷயங்களுக்கு எழுந்து நிற்கின்றனர்.  கத்துவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமைக்குட்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மக்கள் அனைவரும் தங்களது மகளான எண்ணி நீதி வேண்டி வெளியில் வந்து போராடினர்.  மாநிலத்தில் அனைத்து மத தூண்டுதல்கள் இருந்த போதிலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது ஜம்மு மக்கள் அனைவரும் மதநல்லிணக்கத்தோடு செயல்பட்டு போராடியது பாராட்டுதலுக்குரியது” எனக் கூறினார். 

மேலும் தங்களது அழைப்பை ஏற்று வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு  மாநில அரசு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என துணை முதலமைச்சர் நிர்மல் சிங் தனது உரையில் வெளிபடுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து