முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: தேர்வு எழுத மாணவ- மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டது.

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும். ஷூ அணியக் கூடாது. பெரிய பட்டன்கள் வைத்த ஆடைகளை அணியக் கூடாது.

பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது. குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம். தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக் கூடாது.
ஜியோமெட்ரி அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் இதர உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது அறிவுறுத்தப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த ஆண்டு முன்கூட்டியே ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து