முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிம்முடனான சந்திப்பு திருப்திகரமாக இல்லையென்றால் வெளிநடப்பு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: கிம்முடனான சந்திப்பு நல்ல விதமாக அமையாவிட்டால் வெளிநடப்பு செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுகுண்டு சோதனை
அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் வடகொரியா இதுவரை 6 முறை அணுகுண்டுகளை சோதித்து உள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு நகரையும் தாக்கும் வல்லமை வாய்ந்த ஏவுகணைகளையும் அந்த நாடு பரிசோதித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும், வார்த்தை யுத்தமும் நிலவி வந்தது. வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது.

இணக்கமான போக்கு
ஆனால் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப்பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது. இரு நாட்டுத்தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேச உள்ளனர். அதுமட்டுமின்றி, வடகொரியாவுக்காக அமெரிக்காவிடம் தென்கொரியா பரிந்து பேசியது.

நேரடிப் பேச்சுவார்த்தை
அதன் எதிரொலியாக, அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் விருப்பம் தெரிவித்தார். அதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. உடனே அவரும் கிம் ஜாங் அன்னை சந்திக்க தயார் என கடந்த மாதம் அறிவித்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 18 ஆண்டுகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கப்போவது இதுவே முதல் முறை ஆகும்.  டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. பேச்சுவார்த்தைக்கான இடம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஆக்கப்பூர்வமாக இருக்கும்
இந்த நிலையில், புளோரிடாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- “ வடகொரிய  தலைவர் கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமையாது என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்த ஆலோசனை பயனுள்ள வகையில் இருக்காது என்று நாங்கள் கருதினால், சந்திப்புக்கு போகப்போவது இல்லை. சந்திப்பு திருப்திகரமாக இல்லாவிட்டால்,  உடனடியாக வெளிநடப்பு செய்துவிடுவேன்.  அதோடு, வடகொரியாவுக்கு எதிராக என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை தொடர்ந்து செய்வோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து