முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: ஏமன் நாட்டில் 2 தீவிரவாதிகள் பலி

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ரியாத்: ஏமன் நாட்டில் தெற்கு அப்யான் மாகாணத்தில் சவுதி கூட்டுப்படைகளுக்கும், அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 2 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கூட்டுப்படைகள்
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசின் படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களமிறங்கி வான்தாக்குதல் தொடுத்து வருகின்றன.

இருவர் பலி...
மேலும், முராத் அப்துல்லா முகமது அல் தெளப்லி என்று அழைக்கப்படும் மிகவும் பயங்கரவாத அல்கொய்தா தலைவர்களான அபு ஹம்சா அல் படானி மற்றும் ஹசன் பசூரே ஆகியோர் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் உள்நாட்டுபோர்களில் தலையிட்டு அவ்வபோது அரசு எதிராக தாக்குதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தெற்கு அப்யான் மாகாணத்தில் சவுதி அரேபிய கூட்டுபடைகளுக்கும், அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டதாக சவுதி அரசாங்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து