முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி-அல்லிநகரம் நகராட்சியில் பல்வேறு இடங்களில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

தேனி, -தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம், என்.ஆர்.டி.நகர், காந்தி சாலை, என்.ஆர்.டி.மண்டபம் அருகில், தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர்    பல்லவி பல்தேவ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,
 தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்தில் பயணிகள் எவ்வித இடையூறுமின்றி பயணத்தை மேற்கொள்ளவும், பேருந்துகள் தங்கு தடையின்றி வந்து செல்லவும், இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகை அணை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 20,000 இல்லங்களுக்கு குடிநீர்; இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு தற்போது 17,000 இல்லங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இல்லங்களுக்கு குடிநீர் இணைப்புகள் விரைந்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் இல்லங்களில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து நகராட்சி பணியாளர்கள் குப்பை சேகரிக்க வரும் பொழுது வழங்கிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுத்திட தினமும் டிபிசி பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று தண்ணீர்த்தொட்டிகளில் லார்வா கொசுப்புழு உள்ளதா என கண்டறிந்து மருந்து தெளித்திடவும், வீடுகளில் உள்ள பழைய டயர்கள், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அழித்திடவும், வீட்டு உரிமையாளர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், நகராட்சியில் உள்ள அனைத்து சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை முறையாக தூய்மையாக பராமரித்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 ஆய்வின்போது, தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர்  ராஜாராம் அவர்கள்,   நகராட்சி பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து