முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக பெங்களூருவில் குடியேறிய அமித்ஷா

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா பெங்களூருவில் குடியேறியுள்ளார்.

க‌ர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கும் நோக்கில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இதையொட்டி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பெங்களூருவில் குடியேற திட்டமிட்டார். இதற்காக கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆர். அசோக், பெங்களூருவின் மையப் பகுதியில் வீடு தேடும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் பெங்களூருவின் சாளுக்கிய சதுக்கம் அருகேயுள்ள பீல்ட் லே-அவுட்டில் வாடகைக்கு ஒரு பங்களா தேர்வு செய்யப்பட்டது. 6 படுக்கை அறைகள் உட்பட 12 அறைகள் கொண்ட 2 அடுக்கு பங்களாவில் அமித்ஷா குடியேறினார்.தேர்தல் முடியும் வரை அவர் இங்கு தங்க திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக உடுப்பி பூஜாரிகள் மூலம் சிறப்பு யாகமும், பூஜையும் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டுக்கு வந்த அமித்ஷா, பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மூத்த தலைவர்கள் ஆர். அசோக், ஈஸ்வரப்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பீல்ட் லே-அவுட் பகுதியில் அமித்ஷா குடியேறியுள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பா.ஜ.க தொண்டர்கள் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து