முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான கேள்வித் தாளில் பிழை இருந்ததை அடுத்து, மாணவர்களுக்கு சலுகையாக 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று சி.பி.எஸ்.இ.அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வு கடந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்றது.

அப்போது கேள்வித் தாளில் உள்ள 2 மதிப்பெண்களுக்கான பிரிவு- ஏ-ன் மூன்றாவது கேள்வியில் எழுத்துப் பிழை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதுதொடர்பாக சில ஆசிரியர்களும், மாணவர்களும் சி.பி.எஸ்.இ தரப்பிடம் முறையிட்டனர். சி.பி.எஸ்.இ தரப்பில் அவர்கள் இணையவழி மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளதாக சி.பி.எஸ்.இ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை பரிசீலித்த சி.பி.எஸ்.இ நிர்வாகம், எழுத்துப் பிழை ஏற்பட்ட குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மே கடைசி வாரத்தில் 2018 பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து