முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - அமெரிக்கா இடையே ஆயுதப் போர் புடினும், டிரம்ப்பும் அனுமதிக்க மாட்டார்கள் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் உறுதி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: ரஷ்யா - அமெரிக்கா இடையே ஆயுத போர் நடக்க, இரு நாட்டு அதிபர்கள் விளாடிமிர் புடினும் டொனால்டு டிரம்ப்பும் நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் ரஷ்யா, உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் கிளர்ச்சியாளர் கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. டவுமா நகரில் சமீபத்தில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 குழந்தைகள் பலியாயினர். இதற்கு ரஷ்யா, ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அத்துடன் சிரியாவில் 3 ரசாயன ஆயுத கிடங்குகள் மீது அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டு படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அதிபர் புடின், ஐ.நா. விதிகளை மீறி சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் ராணுவம் மூலம் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். மேலும், ரசாயன ஆயுதங்களைக் கண்காணிக்கும் சர்வதேச குழுவினர், சம்பவம் நடந்த டவுமா நகரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதற்கிடையில் சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்தது. இதனால் ரஷ்யா - அமெரிக்கா உறவில் பெரும் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் அரசு செய்தி ஏஜென்சிக்கு, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேட்டி அளித்தார். அதில்,

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் தலைவர்கள்தான். அவர்களை அவரவர் நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, அவர்களுடைய அமைதிக்கு இரு தலைவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, ரஷ்யா - அமெரிக்கா இடையே ஆயுத போர் நடைபெற புடினும் டிரம்ப்பும் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள். இதை 100 சதவீதம் உறுதியாகக் கூறுகிறேன். இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொள்ள அவர்கள் அனுமதிக்கமாட் டார்கள். தற்போது இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் சிக்கலை அவிழ்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் புடினைச் சந்திக்க விரும்புகிறேன்’ என்று தொலைபேசியில் பேசும் போது அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், மாஸ்கோ பயணம் மேற்கொண்டாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். எனவே, இரு நாட்டு உறவில் நீடிக்கும் சிக்கலைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து