முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா: அரசியல் கட்சிகளுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் நான் இன்று முதல் விலகிக் கொள்கிறேன். எந்த கட்சியிலும் இனி நான் சேரப்போவதில்லை. பா.ஜ.க.வுடனான அனைத்துத் தொடர்புகளும் இன்றோடு(நேற்று) முடிந்து விட்டது  என்று மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அறிவித்தார்.

பீகார்  தலைநகர் பாட்னாவில் பா.ஜ.க அல்லாத கட்சிகள் சேர்ந்து நடத்திய ராஷ்ட்ரி மன்ச் எனும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாடி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது:
அனைத்துக் கட்சி அரசியலில் இருந்தும் நான் இன்றுடன்(நேற்றுடன்) விடைபெற்று அரசியலில் துறவறம் செல்கிறேன். இனிமேல் எந்தவிதமான அரசியல் கட்சிகளிலும் நான் சேரப்போவதில்லை. பா.ஜ.கவிலிருந்தும் நான் விலகிவிட்டேன்.

இப்போது பிரதமராக இருக்கும் மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருக்கிறது. இதற்கு முன் இருந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் எவ்வளவு செலவானாலும் பாராளுமன்றம் செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது இருக்கும் பிரதமர் மோடி பாராளுமன்றம் செயல்படாமல் விட்டால் மகிழ்ச்சி அடைகிறார். பாராளுமன்றம் முடங்கினால், எதிர்க்கட்சிகளுடன் பேசி அதற்கான தீர்வை தேட மறுக்கிறார்.

ஒரு வகையில் பாராளுமன்றம் செயல்படாமல் இருப்பது தற்போது இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு மகிழ்ச்சியைத் தரும். ஏனென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு விட்டு விட்டது. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தினேஷ் திரிவேதி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியி மூத்த தலைவர் ஜெயந்த் சவுத்ரி, லூலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், உதய் நாராயன் சவுத்ரி, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து