முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே அபார வெற்றி

சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

புனே: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17-வது லீக் ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தானை வீழ்த்தியது.

17-வது லீக்...
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இப்போது நடந்து வருகிறது. இதில் 17-வது லீக் போட்டி புனேவில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. காயத்தில் இருந்து குணமடைந்த சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்பினார். முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் டார்சி ஷார்ட், குல்கர்னி நீக்கப்பட்டு கிளாசென், ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர்.

ராஜஸ்தான் பீல்டிங்...
‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, சென்னை அணியின் ஷேன் வாட்சனும், அம்பதி ராயுடுவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் ஓவரிலேயே வாட்சன் வீழ்த்திருக்க வேண்டும். அவரது எளிதான கேட்சை ஸ்லிப்பில் நின்ற திரிபாதி நழுவவிட்டார். இந்த லைஃபை பயன்படுத்திக்கொண்ட வாட்சன், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அம்பதி ராயுடு 12 ரன்களில் ஆட்டம் இழக்கவும் ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னா நுழைந்தார்.

ரெய்னா 46 ரன்கள்
இருவரும் அதிரடியாக விளையாடினர். 9.5 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை தொட்டது. 11.5 ஓவரில் அணியின் ஸ்கோர் 131 ரன்களாக இருந்த போது அதிரடி ரெய்னா 46 ரன்களில் அவுட்டானர். அவர், 29 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

டோனி 5 ரன்களில்...
அடுத்து, கடந்த போட்டியில் விளாசியதைப் போல இந்தப் போட்டியிலும் விளாச வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்தார் டோனி. ஆனால், அவர் முயற்சி கைகொடுக்கவில்லை. ஸ்ரேயாஸ் கோபால் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனியை பவுண்டரியில் அருமையாகப் பிடித்தார் கவுதம். அவர் 5 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப,  எதிர்முனையில் நின்று அசராமல் வாணவேடிக்கை நடத்தினார் வாட்சன். அவர், 57 பந்துகளில், 9 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இரண்டாவது சதம்...
இந்த தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இது. இதற்கு முன் பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெய்ல் நேற்று முன்தினம் சதம் அடித்திருந்தார். ஷேன் வாட்சனுக்கு இது 3-வது ஐ.பி.எல். சதம். முன்பு ராஜஸ்தான் அணிக்காக இரண்டு சதங்கள் அடித்துள்ளார். அதில் ஒரு சதம் சென்னைக்கு எதிராக அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

205 ரன்கள் இலக்கு
டி-20 முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பிராவோ 24 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சுரேஷ் ரெய்னாவும் வாட்சனும் ஆடிக்கொண்டிருந்த போது அணியின் ஸ்கோர் 240-க்கு செல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் அருமையாக பந்துவீசி, சென்னையின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். அவர் 4 ஓவர்களில் 20 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார்.

140 ரன்களுக்கு அவுட்...
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கிளாசென் 7, சஞ்சு சாம்சன் 2, கேப்டன் ரஹானே 16, ஜோஸ் பட்லர் 22, திரிபாதி 5, பின்னி 10 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று 45 ரன் சேர்த்தும் பயனில்லை. சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீபக் சாஹர், தாகூர், கரண் ஷர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

சி.எஸ்.கே. முதலிடத்தில்...
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றி. இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தானுக்கு 3-வது தோல்வி. சென்னை, தனது அடுத்த ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை சந்திக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து