முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டியில் 1330 திருக்குறள் ஒப்புவிக்கும் 3 ஆம் வகுப்பு மாணவி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

 ஆண்டிபட்டி -ஆண்டிபட்டியில் உள்ள லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 13வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி முதல்வர் பியூலா ரஜினி தலைமை தாங்கினார். தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த டேனியல் துரைப்பாண்டியன் விழாவை துவக்கி வைத்து பேசினார். பள்ளி தாளாளர் ஹென்றி முன்னிலை வகித்தார். மதுரை காமராசர் பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் . ஜெனிபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பள்ளியின் முதல்வர் வீரலட்சுமி வரவேற்றுப் பேசினார். துணை முதல்வர் உமா மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் 1330 திருக்குறள் ஒப்புவிக்கும் 3 ஆம் வகுப்பு மாணவி முதலமைச்சர் விருது பெற உள்ளார். அந்த சிறுமிக்கு பாராட்டும் பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பெற்றோர், சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மின்னொளியில் நடந்தது. யோகா, காராத்தே உள்ளிட்டவைகளை மாணவ, மாணவிகள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து