முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 ஆண்டுகளுக்கு முந்தைய 2½ ரூபாய் நோட்டு ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளியான 2½ ரூபாய் நோட்டு ஒன்று ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் ஆட்சி காலத்தில் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். அச்சிடும் முறை கண்டு பிடிக்கப்பட்டதற்கு பிறகு பல நாடுகளில் காகிதத்தால் ஆன பண நோட்டுகளை வெளியிட்டனர். இவ்வாறு பழங்காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள், பண நோட்டுகள் அரிய பொக்கி‌ஷங்களாக கருதப்படுகின்றன. இதனால் அவை மிகுந்த விலை கொடுத்து வாங்கப்படுகிறது.

ரூ. 3 லட்சத்துக்கு ஏலம்

இந்தியாவில் இதுபோன்ற பணங்களை விற்பதற்கான சந்தை மும்பையில் செயல்பட்டு வருகிறது. அங்கு அவ்வப்போது பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஏலம் விடப்படும். அதே போல ஏலம் விடும் பணி நேற்று முன்தினம் நடந்தது. 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 2½ ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டிருந்தது. அந்த ரூபாய் நோட்டு ஒன்று ஏலத்திற்கு வந்தது. அதை பலர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இறுதியாக அந்த பணம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது.

புதுவை, கோவா நோட்டுகள்

அதே போல புதுவையில் பிரெஞ்சுகாரர்கள் காலத்தில் வெளியான ரூபாய் நோட்டு ஒன்றும், கோவாவில் போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி காலத்தில் வெளியான ரூபாய் நோட்டு ஒன்றும் ஏலத்திற்கு வந்தது. அதில் புதுவை ரூபாய் நோட்டு ரூ.50 ஆயிரத்திற்கும், கோவா ரூபாய் நோட்டு ரூ.25 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

ஏலம் போகவில்லை

நேற்று ஏலம்போன 2½ ரூபாயில் இன்னொரு நோட்டு 2015-ம் ஆண்டு இங்கு ஏலம் விடப்பட்டது. அதற்கு அடிப்படை விலையாக ரூ.2½ லட்சம் நிர்ணயம் செய்தனர். ஆனால் அப்போது ரூ.6 லட்சத்துக்கு அந்த பணம் ஏலம் போனது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கொல்கத்தா பகுதியில் மட்டும் புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட்டும் ஏலத்திற்கு வந்தது. ஆனால் அந்த பணத்திற்கு ரூ. 8 லட்சம் அடிப்படை விலை நிர்ணயித்து இருந்தனர். ஆனால் அதிக விலை என்பதால் அது ஏலம் போகவில்லை.

வழக்கமாக இங்கு ஏலம் விடும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை விற்பனையாகாமல் தேங்குவது உண்டு. ஆனால் இப்போது இவற்றை வாங்குவதில் ஆர்வம் குறைந்திருப்பதால் 30-ல் இருந்து 40 சதவீதம் வரை தேங்குவதாக ஏலம் விடும் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து