முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடிநாயக்கனூர் மேல்நிலைப் பள்ளியில் 10,292 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஜமீன்தாரினி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில் 10,292 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.13.79 கோடி மதிப்பிலான மடிக்கணினிகளையும், 100 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.24.97 லட்சம் மதிப்பிலான  மானியத் தொகையினையும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்:
இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,
தமிழக மாணவ, மாணவியர்கள் விஞ்ஞான வளர்ச்சியோடு இசைந்து கற்கின்ற கல்வியில் தொழில் நுட்ப இடைவெளியை குறைப்பதற்காக விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-12 ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மொத்தம் 31,78,019 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
மாணவச் செல்வங்கள் மடிக்கணினிகளைப் பெற்று, புதிய விஞ்ஞான உலகத்தில் அடியெடுத்து வைக்கும் இனிய தருணம் இது. மாணவர்களும், மாணவியர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னால், உள்ளத்தில் உறுதி வேண்டும். உழைப்பில் ஊக்கம் வேண்டும். எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையாக நம்பிக்கை வேண்டும். எந்த செயலையும் வெற்றியுடன் நிறைவேற்ற என்னால் இயலும் என்ற நம்பிக்கையை மாணக்கர்கள் பெற்றிட வேண்டும். இத்தகையை நம்பிக்கையை மாணவச் செல்வங்கள் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும். செய்கின்ற முயற்சியில் நம்பிக்கை வேண்டும், ஆற்றுகின்ற செயலில் நம்பிக்கை வேண்டும. நம்முடைய உழைப்பில் கட்டாயம் நம்பிக்கை வேண்டும். அத்தகைய நம்பிக்கையால் நமக்கு எப்போதும் வெற்றியே கிட்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழவில், தேனி எம்.பி. .ஆர்.பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ எஸ்.டி.கே.ஜக்கையன்,  மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வசந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வம், ராஜேஸ்வரி, தேனி முன்னாள் எம்.பி. சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ . ஆர்.டி.கணேசன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து