முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதாவுடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக மக்களுக்கு எதிராக இருக்கும் பாரதிய ஜனதாவுடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி: பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா?

பதில்: தேர்தல் நேரத்தில்தான் யாருடன் கூட்டணி என்பது பற்றி முடிவு செய்யப்படும். அதை கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.அ.தி.மு.க.வை அம்மா எப்படி கட்டுக்கோப்பாக நடத்தினாரோ அதே கட்டுக் கோப்புடன்

இன்றைக்கும் நடத்தப்படுகிறது. கூட்டணி குறித்து தனிப்பட்ட ஒருவர் முடிவு செய்ய முடியாது.

கேள்வி: தமிழக நலன்களை புறக்கணிக்கும் மத்திய அரசை தொடர்ந்து எதிர்ப்பீர்களா?

பதில்: தமிழகத்தின் நலன்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தால் நாமும் தொடர்ந்து எதிர்ப்போம். தமிழகத்தின் நலன்தான் நமக்கு முக்கியம். தமிழக மக்கள்தான் நமக்கு முக்கியம். தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும்

எதிராக இருப்பவர்களுடன் நாம் எப்படி உடன்பாடு வைத்துக் கொள்ள முடியும். தமிழ் நாட்டுக்கு உற்ற நண்பர்களாகவும், தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய இருப்பவர்களுடன்தான் எங்களின் உறவு இருக்கும். அந்த உறவைக் கூட நிர்ணயிருப்பது நானோ, நீங்களோ அல்ல. அதை கட்சிதான் முடிவு செய்யும்.

கேள்வி: தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என்று மு.க. ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

பதில்: அவர் சொல்வதை பார்க்கும்போது கடல் வற்றி கருவாடு சாப்பிடலாம் என்று நினைத்த கொக்கு குடல் வற்றி இறந்த கதைதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. எப்ப கடல் வற்றுவது, எப்போது கருவாடு சாப்பிடுவது. தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது. அம்மாவின் அரசை வெளிப்படையான நிர்வாகம் என்ற அளவில் நடத்திக் கொண்டிருக்கிறோம். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். காமாலை கண்டவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல அவர்களுக்கு அதே பார்வை தான் இருக்கிறது. காவிரிக்காக ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராடலாம். தி.மு.க. போராடுவதை விமர்சிக்க மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து