முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் மே 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

சென்னை : பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்கள் மே 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

567 கல்லூரிகள்

இது குறித்து அண்ணா பல்கலைகழகத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் மொத்தம் 567 கல்லூரிகள் பங்கேற்கின்றன. பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 42 மையங்கள் திறக்கப்பட உள்ளது. மையங்களில் விண்ணப்பங்களை பதிவு செய்ய கட்டணம் ஏதுவும் கிடையாது. விண்ணப்பங்களை பதிவு செய்யும் மையத்தில் கணிணி, அச்சுப்பொருட்கள், பயிற்சி பெற்ற நபர், சிற்றுண்டி போன்ற வசதிகள் இடம் பெற்றிருக்கும். கல்லூரியை தேர்ந்தெடுத்தல், கல்லூரி ஒதுக்கீடு ஆணை பெறுதல் போன்ற வசதிகளை இம்மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த மையங்கள் ஏற்படுத்துவதற்கான செலவை அரசே ஏற்கும்.

மே 30-ம் தேதி கடைசி...

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் குறித்த அறிவிப்பு 29-ம் தேதி வெளியாகும்.மே 3 ம் தேதி முதல் ஆன் லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் நடைமுறை துவங்கும். விண்ணப்பங்களை பதிவு செய்ய மே 30-ம் தேதி கடைசி நாளாகும். பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த காலி இடங்கள் மே 15-ம் தேதி தெரியவரும். ஜூன் முதல் வாரத்தில் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும். இந்த பணிகள் 6 நாள் நடைபெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

விண்ணப்பம் பதிவு

விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்குரிய இணையதளத்தின் வாயிலாக விண்ணப்ப பதிவிற்கான ரூ.500 (ரூ.250 எஸ்.டி., எஸ்.சி) தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தேவையெனில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களை உபயோகித்தும் பதிவு செய்யலாம். உதவி மையங்களில் மாணவர்களின் நலனுக்காக மாதிரி தரவுத்தாள் (Data Sheet) வழங்கப்படும். அதில் மாணவர்கள் தேவையான தகவல்களை முன்கூட்டியே பூர்த்தி செய்துகொண்டு வந்தால் கணினியில் பதிவு செய்வதற்கு இலகுவாக இருக்கும்.தகுதி பட்டியல் தயார் செய்யும்போது ஏற்படும் சமநிலையை தவிர்க்க சமவாய்ப்பு எண் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ஒதுக்கப்படும்.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு செய்த படிவத்தை அச்செடுத்து கொண்டு, விண்ணப்ப அசல் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்களின் நகல்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுக வேண்டும். அங்கு விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பப்படி விண்ணப்பம் பதிவு செய்யும் போதே தேர்வு செய்து கொள்ளலாம்.உதவி மையங்களில் விண்ணப்பதாரர்களுக்கு அச்சிடப்பட்ட கல்லூரி பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும்.

விண்ணப்பதாரரின் வசதிக்காக கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான செயல்முறைகளை காணொளி காட்சி மூலம் உதவி மையங்களில் காட்சிப்படுத்தப்படும். பின்னர், தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் வெளியிட்டப்பின், விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், தங்களது குறைகளை சரிசெய்ய ஒரு வார கால அவகாசம் ஒதுக்கப்படுகிறது. அச்சயம் விண்ணப்பதாரர்கள் செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அலுவலகத்தை (சென்னையில்) அணுகி குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து