முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களுக்கு போலீஸைவிட முதல் பாதுகாப்பு பெற்றோர்தான்: ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, பெண்களுக்கு முதல் பாதுகாப்பு பெற்றோர்தான் எனவும், அனைவரும் சுய பாதுகாப்பை பார்த்து கொள்ள வேண்டும் எனவும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கி நேற்றிரவு 11 மணிக்கு பறக்கும் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் இளம் பெண் ஒருவர் ஏறினார். பேப்பர் படித்துக் கொண்டிருந்த அந்த பெண் சற்று நேரத்தில் அசதி காரணமாக தூங்கி விட்டார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஸ்டேஷனாக வர, வர பயணிகள் இறங்கி சென்றனர். இதனால் சத்யராஜ் என்ற 25 வயது இளைஞர் மட்டும் இளம்பெண்ணுடன் அந்த ரயில் பெட்டியில் இருந்தார். ஒருவரும் அங்கு இல்லாத தைரியத்தில் சத்யராஜ் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். தூக்கத்திலிருந்து விழித்த அந்த பெண் பதறி போய், அலறி கத்தினார். பக்கத்து பெட்டியில் பயணம் செய்திருந்த ரயில்வே போலீஸ் சிவாஜி என்பவருக்கு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. எனினும் அவரால் உடனடியாக ஓடி செல்ல முடியாமல் அடுத்த ஸ்டேஷன் வரும்வரை காத்திருந்து, பிறகு சென்றார். அங்கு பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்த அந்த சத்யராஜை பிடித்து, ரயில்வே போலீசில் சிவாஜி ஒப்படைத்தார். எனினும் பலாத்கார அதிர்ச்சியிலிருந்த அந்த பெண் மயக்கடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை ஐ.ஜி.பொன்மாணிக்கநேரில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் பேசினார்.

பெண்களுக்கு போலீஸை விட முதல் பாதுகாப்பு பெற்றோர்தான். அந்த இளம் பெண் இரவு 11 மணி, தனியாக பயணம் செய்துள்ளதுடன், பெண்களுக்கான பெட்டியில் ஏறாமல் பொதுவான பெட்டியில் ஏறியுள்ளார். பெட்டியில் யாரும் இல்லாததை குற்றவாளி சாதகமாக பயன்படுத்தி கொண்டான். பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியில் உள்ளார். அவரிடம் முக்கால் மணி நேரம் விசாரணை நடத்தினேன். பாலியல் தொல்லை கொடுத்த நபரை விட்டு விடக்கூடாது. தூக்கில் போட வேண்டும். குற்றவாளிக்கு 10 வருட சிறை தண்டனையாவது நிச்சயம் கிடைக்கும். வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோன்ற துயரம் நேரக்கூடாது. அனைவரும் முதலில் சுயபாதுகாப்பை பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, இளம்பெண்ணை மீட்ட ரயில்வே எஸ்.ஐ. சுப்பையா, காவலர் சிவாஜி ஆகியோரை பாராட்டிய பொன்.மாணிக்கவேல் இருவருக்கும் தலா ரூ.5000 வெகுமதியாகவும் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து