முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

செங்கல்பட்டு : மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

கடந்த 12-ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் பாரதிராஜா, சீமான், அமீர், கௌதமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே மோடி டெல்லி செல்ல விமானம் ஏறிய பிறகும் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்படாத செய்தி பரவியது.

இதையடுத்து பல்லாவரம் திருமண மண்டபத்துக்கு சென்ற மன்சூர் அலிகான் தன்னையும் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டு மன்சூர் அலிகான் மட்டும் விடுவிக்கப்படவில்லை.

மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து