முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபடுவதாக தி.மு.க.வினர் மீது பொதுமக்கள் புகார்:

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகேயுள்ள மாசவநத்தம் கிராமப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க.வினர் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாப்டூர் சதுரகிரி மலைப் பகுதிகளில் மழை பெய்திடும் சமயத்தில் காட்டாறு பெருகி கமண்டலநதியாக மாறி திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை வழியாக பெருக்கெடுத்துச் சென்று குண்டாற்றில் இணைந்து கடலில் கலந்து விடுகிறது.தற்போது கள்ளிக்குடி ஒன்றியம் மாசவநத்தம் பகுதியில் இந்த ஆற்றுப் படுகையின் கீழும் சில பட்டா நிலங்களின் அடியிலும் தரமான மணல் கிடைத்து வருகிறது.தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மாசவநத்தம் பகுதியிலுள்ள ஆற்றுப்படுகை மற்றும் தனியார் பட்டா இடங்களில் உள்ள மணலை நள்ளிரவில் திருட்டுத்தனமாக அள்ளி அதிகவிலைக்கு தென் மாவட்டங்களில் விற்பனை செய்திடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இது தான் எங்கள் உலகம் என்ற பாடல் வரிகளின்படி நள்ளிரவில் விருதுநகர் மாவட்ட எல்லைக்கு மிகவும் அருகிலுள்ள மாசவநத்தம் மாந்தோப்பு கண்மாய் கரைப் பகுதியில் அதிநவீன இயந்திரங்களை கொண்டு மணல் திருடும் நிகழ்வுகளும் அதனை 10சக்கரம் கொண்ட டாரஸ் லாரிகளில் ஏற்றி நெல்லை,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்திடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.ஆள்நடமாட்டம் இல்லாத பேய்க்குளம் வழியாக இந்த மணல் கடத்தல் லாரிகள் இயக்கப்படுவதால் வெளி உலகிற்கு தெரியாமல் போய் விடுகிறது.எனினும் இந்த மணல் திருட்டில் ஈடுபட்டு வருபவர்கள் அனைவரும் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பது பொதுமக்களிடையே வியப்பினை எற்படுத்தியுள்ளது.குறிப்பாக தி.மு.க பிரமுகர்களான குராயூரைச் சேர்ந்த ஒருவரும்,சென்னம்பட்டியைச் சேர்ந்த ஒருவரும் இந்த மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக போலீஸ் நடமாட்டம் இல்லாத நாட்களையே இந்த மணல் கடத்தல் கும்பல் தேர்வு செய்து தனது அட்டகாசத்தை ஆரம்பிக்கிறது. எடுத்துக்காட்டிற்கு ஜல்லிக்கட்டு திருவிழா,கோவில் விழாக்கள்,முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் பிற இடங்களில் எற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றுக்கு அதிகளவு போலீசார் சென்றுவிடும் சமயத்தில் மாசவநத்தம் பகுதியில் மணல் திருட்டு உச்சகட்டத்தை எட்டி விடுகிறதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசவநத்தம் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை மடக்கிப்பிடித்த வருவாய் துறையினர் அவற்றை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.மணல் கடத்தலில் ஈடுபடும் தி.மு.க.வினர் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து திருமங்கலம் பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவினை ஏற்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து