முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய 5 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை - இந்திய ராணுவம் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய 5 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

அத்துமீறி தாக்குதல்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. அவ்வப்போது இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். 3 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவ முகாம்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதிகளுடன்...

அதேபோன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே  துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பேர் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவத்தினர் கடும் சண்டையில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.

2 வீரர்கள் பலி...

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலே உயிரிழந்துவிட்டனர். சண்டையில் ஒரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் ராணுவ வீரர் அஜய் மற்றும் மாநில போலீஸ் படையை சேர்ந்த லாதீத் குஜ்ரி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து