முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை முஜிப் வீசியது ஏன்? பஞ்சாப் கேப்டன் அஸ்வின் விளக்கம்!

செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : கடைசி ஓவரை சுழல் பந்துவீச்சாளர் முஜிப்பிடம் கொடுத்து ஏன் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்தார்.

மீண்டும் தோல்வி...

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி நேற்றிரவு நடைபெற்ற து. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் தொடர்ந்து, சேசிங் கை தொடங்கிய டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயரைத் தவிர்த்து யாரும் கணிசமான ரன்களை எடுக்கத் தவறினர். அரை சதத்தைக் கடந்த ஐயர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆட்டமிழந்தார். இதனால் டெல்லி அணி தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை முஜிப்பிடம் வீசச் சொன்னார் அஸ்வின். இதையடுத்து ஐந்து பந்தில் 12 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர், கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் முயற்சியில் அவுட்டானர். இதனால் டெல்லி தோல்வியை தழுவியது.

மகிழ்ச்சியளிக்கிறது

வெற்றிக்குப் பின் பேசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், ‘இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடைசி ஓவரை முஜிப்பிடம் கொடுத்தது ஏன் என்று கேட்கிறார்கள். எல்லோரும் ஆலோசித்தோம். இந்தப் போட்டியில் ஆண்ட்ரூ டை நன்றாக பந்துவீசினார். இதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தீவிரமாக நினைத்தோம். இதனால் புதிய முயற்சியாக முஜிப்பிடம் கடைசி ஓவரை கொடுத்தோம். பிட்சில் பந்து சறுக்கியது. அவர்கள் அழுத்தம் காரணமாக அடித்து ஆட நினைத்தார்கள். அது எங்களுக்கு விக்கெட்டாக மாறியது’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து